Wednesday, January 13, 2010

அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துகள்,



தைப்பொங்கல் மக்களால் இயல்பாக கொண்டாடப்படுகிறது. உழைக்கும் மக்கள் தாமே கண்டுணர்ந்து தமது உழைப்பிற்க்கு உதவிய இயற்க்கை சக்திகளுக்கும் தம்மோடு சேர்ந்து உழைத்த கால் நடைகளுக்கும் மகிழ்ச்சியை தெரிவிக்கும் விழாவே தைத்திருநாள்.

உழவர்கள் மழையின் உதவியால் ஆடிமாதம் முதல் உழைத்து சேர்த்த நெல்லை மார்கழியில் தமது வீட்டிற்க்கு எடுத்து செல்லும் நாளே தைப்பொங்கல்.

சங்க காலத்தில் அறுவடை காலங்களில் நல்ல மழை பெய்யவும் நாடு செழிக்கவும் பெண்கள் இந்த விரதத்தை கடைபிடித்தனர். தை முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி சூரியன் உதவிய கால்நடைகள் போன்றவற்றிற்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப்பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் தைத்திருநாள் கொண்டாட்டங்களாக மாறியது.

4 comments:

  1. பொங்கலோ பொங்கல்

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்

    ReplyDelete
  3. இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  4. எப்பூடி அண்ணா இப்பூடி விக்கி விக்கி பிடிச்சு தைப்பொங்கல பற்றி ரொம்ப சிறப்பா எழுதி இருக்கீங்க?

    ReplyDelete