Thursday, January 28, 2010

'நண்பா உன்ட ACCOUNT நம்பர தர்றியா'

நண்பா, உன்னுடைய நம்பர தர்றியா! என்று ஒருவன் ஓடோடிவந்து கேட்கிறான். அவன்தான் மதன். பதிலுக்கு வாசு விளக்கம் கேட்கிறான்.... இல்ல வாசு, காசுக்கு சரியான பிரச்சனையாக இருக்கு, அவசரமாக பணம் தேவைப்படுது அம்மாவிடம் விசயத்த சொல்லி காசு கேட்டன்...

அம்மா Accountல போடுறம்னு நம்பரொண்டு கேட்டா! அதுதான் மச்சான் எனக்கு account நம்பர் இல்லையே!!!! எனக்கு Accountநம்பர் இல்லன்னு உனக்கு ஏற்கனவே நான் சொன்னேனே..

மதன் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும், ஏற்கனவே திட்டமிட்டுதான் பேசுவான்.

பாவம் வாசு, இவனின் சித்துவிளையாட்டுக்களை அறியாதவனாகவே இருந்தான்.......

உன்ட நம்பர தர்றிய என்று கேட்டான் மதன். கள்ளம்கபடம் தெரியாத வாசு அவனது இலக்கத்தை மதனிடம் கொடுத்தான். மதன் சொன்னதுபோல வாசுவின் வங்கிக்கணக்கில் பணம் போடப்பட்டது.வாசு அந்த பணத்தை எடுத்து மதனிடம் கொடுத்தான். இரண்டு நாட்களில் வாசுவை காவற்துறையினர் கைதுசெய்தனர்.

பத்து லட்சம் வங்கிக்கணக்கில் பணம் போடப்பட்டது. அதை எடுத்து கொடுக்கும்போதுகூட இவ்வளவு பெரிய தொகை எப்படி கணக்கில் வைப்பில் இடப்பட்டது என்பதை வாசு யோசிக்கவில்லை.

நடந்தது இதுதான்.......


ஒரு செல்வந்தரின் மகனை கடத்திவைத்துக்கொண்டு பணம் தருமாறு மிரட்டி அந்த பணத்தை வாசுவின் கணக்கில் இடுமாறு கணக்கிலக்கத்தை கொடுத்திருக்கிறான். பணத்தை வழங்கிய செல்வந்தர் மகனை மீட்டபிறகு காவல்துறையிடம் முறையிட்டு அந்த கணக்குக்கு உரிய வாசுவை தேடிப்பிடித்து கைது செய்திருக்கிறார்கள். இப்பொழுது வாசு சிறையில்.

அப்படி செய்யவில்லையென்று பலதடவை சொல்லியும் யாரும் வாசுவை நம்பவில்லை.

உங்கள் கணக்கின் இலக்கத்தை தாருங்கள், பணம் தேவைப்படுகிறது உங்கள் கணக்கில் வைப்பு செய்ய சொல்கிறேன். எடுத்துத்தரமுடியுமா என்று கேட்டால் கடுமையாக யோசித்து முடிவெடுங்கள்.

நன்றி...
N.நிழல்

Saturday, January 16, 2010

யாரிலிருந்து 6 வரை....... கம்பி எண்ணும் நான்கு பேரின் உண்மைக்கதை.....


யாரிலிருந்து 6 வரை எனும் தலைப்பில் வித்தியாசமான சில அனுபவங்களை, எனது வலைப்பதிவில் பதிவிடலாமென நீண்ட சிந்தனைக்குப்பின் முடிவெடுத்துள்ளேன்.....

இது ஒரு நேரடி விஜயம்.....


யாரிலிருந்து 6 வரை... இதோ முதல் பதிவு......................


N.நிழல் கதை-01

இரண்டு நண்பர்கள், ஒருவர் சிவா மற்றையவர் மனோ. இவர்களில் மனோ மிக முக்கியமானவன் [குறிப்பு->ஊரும் பேரும் வேறு] தீந்தை பூசும் வேலை செய்பவர்கள்.இவர்களுடன் இன்னும் இருவர். எல்லோரும் ஒன்றாக இணைந்து சிவாவின் தலைமையில் ஒரு குழுவாக வேலை பார்த்துவந்தனர்.

புதிதாக ஒரு ஒப்பந்தம், இரண்டு மாடிகளைக்கொண்ட வீடொன்றுக்கு தீந்தை பூசவேண்டும்.
ஒப்பந்தத்தொகையும் தீர்மானித்து உடன்பாடு எட்டப்பட்டது. வேலைகளும் ஆரம்பமாகின.முற்பணம் கொடுக்கப்பட்டது.ஆனால், வேலை முடிவடையும் தறுவாயில் இருக்கும்போது,வீட்டுக்காரர்களின் நடவடிக்கைகளில் பல்வேறு மாற்றங்கள். விஷயம் தெரியாத சிவா தலைமையிலான தீந்தை வேலையாட்கள்,அனைத்து வேலைகளையும் முடித்தனர்.


கிடைக்கவேண்டிய மீதித்தொகையினை பெற்றுக்கொள்ள சென்றால், பணம் கிடைத்தபாடில்லை.

எத்தனையோமுறை அலைந்தும் சரிவரவில்லை.

என்ன செய்திருப்பார்கள்???????????

இது உண்மை சம்பவம் என்பதனை மீண்டும் நினைவூட்டுகிறேன்.

மீதிப்பணத்தை பெற்றுக்கொள்ள வழிதெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்த இந்த குழுவினருக்கு வீடு புகுந்து கொள்ளையடிப்போம் என்ற யோசனையை மனோ முன்வைத்தான்.

செய்வதறியாதிருந்த இவர்களுக்கு மனோவின் ஆலோசனை சரியென முடிவானதால், இன்று இவர்கள் எல்லோரும் சிறைச்சாலையில் கம்பி எண்ணிக்கொன்றிக்கிரார்கள்.

ஒருநாள் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப்பார்த்து மனோவின் தலைமையில் நால்வரும் ஒன்றாக இணைந்து அந்த வீட்டுக்குள் நுழைந்தனர். மனோவின் திட்டப்படி பொருட்கள் அனைத்தும் திருடப்பட்டன. மனோ தீட்டி வைத்திருந்த திட்டப்படி நால்வருக்கும் எந்த தடுமாற்றமும் இல்லாமல் தப்பியோடவும் முடிந்தது. அடுத்தநாள் விடிந்ததும் தமது வீடு கொள்ளயிடப்பட்டமை தெரிந்ததும், அருகில் இருந்த காவற்துறையில் முறைப்பாடொன்றினை பதிவு செய்தனர்.

யார்மீது சந்தேகமென்று கேட்டதற்க்கு, கொள்ளையர்கள் இந்த குழுதான் என உறுதியாக தெரிவித்தனர். முதலில் பிடிபட்டது மனோ,விசாரணையில் எல்லோர் பெயர்களையும் பட்டியளிட்டான்.

இன்று சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்....மச்சான் வெளியில் சென்று பெரிய Game ஒன்று குடுக்குறன் பாரு! இவை, மனோ இப்போது அடிக்கடி சொல்லிக்கொண்டிருக்கும் வார்த்தைகள்.......

நால்வரும் கன்னத்தில் கைவைத்துக்கொண்டு புலம்பிக்கொண்டிருப்பதை நான் பார்த்தேன்...............1 2 3 4 5 6....... [6 கம்பிகளையும் திரும்பத்திரும்ப எண்ணுவதுதான் அங்கிருப்பவர்களின் பொழுதுபோக்கு]

Wednesday, January 13, 2010

அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துகள்,தைப்பொங்கல் மக்களால் இயல்பாக கொண்டாடப்படுகிறது. உழைக்கும் மக்கள் தாமே கண்டுணர்ந்து தமது உழைப்பிற்க்கு உதவிய இயற்க்கை சக்திகளுக்கும் தம்மோடு சேர்ந்து உழைத்த கால் நடைகளுக்கும் மகிழ்ச்சியை தெரிவிக்கும் விழாவே தைத்திருநாள்.

உழவர்கள் மழையின் உதவியால் ஆடிமாதம் முதல் உழைத்து சேர்த்த நெல்லை மார்கழியில் தமது வீட்டிற்க்கு எடுத்து செல்லும் நாளே தைப்பொங்கல்.

சங்க காலத்தில் அறுவடை காலங்களில் நல்ல மழை பெய்யவும் நாடு செழிக்கவும் பெண்கள் இந்த விரதத்தை கடைபிடித்தனர். தை முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி சூரியன் உதவிய கால்நடைகள் போன்றவற்றிற்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப்பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் தைத்திருநாள் கொண்டாட்டங்களாக மாறியது.

Sunday, January 10, 2010

எனது ரசிகர்கள் தந்த இன்ப அதிர்ச்சி.............

நத்தார் மற்றும் புதுவருட கொண்டாட்டங்களின்போது தவிர்க்கமுடியாத சில கசப்பான காரணங்களால், சூரியன் வானலைகளில் எனது குரல் ஒலிக்கவில்லை. எனக்கும், என்மீது உண்மையான அன்பு வைத்திருக்கும் அனைவருக்குமே இது ஒரு குறையாகவே இருந்தது.

இது இப்படி இருக்கும்போது, எதிர்பாராத நேரத்தில் எனக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி எனக்கும் என்னை சார்ந்தவர்களுக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்தது.

நடந்ததை குறிப்பிடுகிறேன்,
10:01:2010 அன்று தெஹிவளை Concord திரையரங்கில் Vijai நடித்த வேட்டைக்காரன் திரைப்படத்தின் இலவச காட்சி சூரியன் சொந்தங்களுக்கு காண்பிக்கப்பட்டது. திரைப்படம் ஆரம்பிக்க சில நிமிடங்கள் இருக்கும்போது, அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஒன்றாக இணைந்து எழுப்பிய கரகோஷங்களை மிஞ்சிய பட்டாசு சத்தமும், தலைக்குமேல் தூவிய மினுக்கங்கள் நிறைந்த வண்ணப்பூமழையிலும் நான் முழுமையாக நனைந்தேன்.

எனக்கு இனிப்பு பண்டங்கள் பிடிக்கும் என்பதை அறிந்து, முற்றிலும் இனிப்புகளால் தொடுக்கப்பட்ட இனிப்பு மாலைகளை அணிந்து அழகு பார்த்தார்கள்.

என் உயிரிலும் மேலான எனது ரசிகர்களுக்கு எனது நன்றிகள்.......

Monday, January 4, 2010

மீண்டும் மீண்டு வந்துவிட்டேன்..........

மீண்டும் மீண்டு வந்துவிட்டேன்.இனி பதிவுகள் தொடரும்......

வித்தியாசமான பதிவுகளை எதிர்பாருங்கள். வானொலியில் எனது குரல் கேட்காத இத்தனை நாட்களும் அத்தனை அனுபவங்கள்.....