Friday, December 18, 2009

இலங்கை வீரர்கள் திட்டமிட்டு செய்திருப்பார்களோ..........

இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணிதான் வெல்லும் என்ற எண்ணம் என் உள்மனதில் ஓடியது.எனது நண்பர் சூரியனின் நிதி முகாமையாளர் ராஜ் அண்ணாவிடம் இலங்கை அணிதான் வெல்லுமென்று சொன்னேன். அவர் இந்திய அணிதான் வெல்லுமென்று சொன்னார்.[நான் என்ன சொன்னாலும் எனது கருத்திற்கு எதிரான கருத்தினை அவர் சொல்லவார் இப்படி ஒருவிதமான நடைமுறை எங்களுக்குள் இருந்தது] முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிதான் வெல்லுமென்று நான் சொன்னேன் இல்லை இல்லை இலங்கை அணிதான் வெல்லுமென்று அவர் சொன்னார். முடிவில் ஜெயித்தது நான்தான்.

இரண்டாவது ஒருநாள் போட்டி ஆரம்பிப்பதற்காக நாணயம் சுழற்றப்பட்டது. நாணயம் தோனியின் குரலுக்கு செவி சாய்த்தது. எனது தொலைபேசியில் திடிரென ராஜ் அண்ணாவின் பெயர் தென்பட்டது,அவரின் அழைப்பை ஏற்றுக்கொண்டேன், அவரது சிரிப்பொலி கேட்டது, நானும் சிரித்தேன்.

இந்திய அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்து சில நிமிடங்களில் அதிரடி ஆட்டக்காரர் ஷெவாக் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததும்,எனது தொலைபேசியை எடுத்தேன் அழைத்தேன் சிரித்தேன், அவரும் சிரித்தார். இன்னும் சில நிமிடங்களில் கம்பீரும் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.நான் மீண்டும் அதே நடைமுறையினை செய்தேன். சச்சின் தோனி ரெய்னா இருப்பதாக சொன்னார். அவர் சொன்னதுபோல தோனி 107 ஓட்டங்கள்,சச்சின் 43 ஓட்டங்கள்,ரெய்னா 68 ஓட்டங்கள். இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 301 ஓட்டங்களை எடுத்தது. எனக்கு அழைப்பு வந்தது. ஆஹா ஓஹோ என சிரித்தார். சமாதானத்திற்க்கு வருவோமா எனக்கேட்டார். [இந்த மைதானத்தில் இதற்க்குமுன் ஒரேயொரு சர்வதேச ஒருநாள் போட்டிதான் நடைபெற்றது.அதிலும் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 300க்கும் அதிகமான ஓட்டங்களை பெற்று ஜெயித்தது] ஆனால் நான் எனது முடிவில் தீர்மானமாகவே இருந்தேன்.

பந்து வீச்சில் இலங்கை வீரர் ரந்திவ் 3 விக்கட்டுகளையும் வெலகெதர,மென்டிஸ்,மெத்திவுஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டுகளையும் வீழ்த்தினார்கள். இலங்கை அணி துடுப்பாட களம் புகுந்து சிறப்பாக ஓட்டங்களை குவித்தது. அழைத்தேன் சிரித்தேன்.அவர் மௌனம் சாதித்தார். டில்ஷான் 123 ஓட்டங்கள் எடுத்தபோது திடிரென ஆட்டமிழந்தார். மீண்டும் அழைப்பும் வந்தது சிரிப்பொலியும் கேட்டது. சங்கக்கார 21 ஓட்டங்கள்,ஜெயவர்த்தன 39 ஓட்டங்கள்,கண்டம்பி 27 ஓட்டங்கள்,மெத்திவுஸ் 37 ஓட்டங்கள் எடுத்தனர்.


இறுதியில் 302 ஓட்டங்கள் எடுத்து இலங்கை அணி வென்றது. திட்டமிட்டு செய்திருப்பார்களோ? இந்திய அணியும் 7 விக்கட்டுகளை இழந்து 301 ஓட்டங்களை எடுத்தது. அதேபோல் இலங்கை அணியும் 7 விக்கட்டுகளை 302 ஓட்டங்களை எடுத்து ஜெயித்தது. பந்துவீச்சில் சாஹிர்கான் 3 விக்கட்டுகளையும், ஆஷிஷ் நெஹ்ரா, ஹர்பஜங் சிங் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டுகளையும் வீழ்த்தினார்கள். போட்டி முடிந்ததும் அழைத்தேன்,சிரித்தேன்! பதிலுக்கு அவர் சொல்லியதை சொல்கிறேன் வாசியுங்கள்>>> "வாழ்க்கை என்றால் அப்படித்தான் மேடுபள்ளம் இருக்கத்தானே செய்யும்" என்ன கொடுமையென்றால்,அவருக்கு இரண்டுமுறையும் பள்ளம்தான்.........எது எப்படி இருந்தாலும், தோல்விக்கான காரணம் என்னவென இந்திய அணயின் தலைவர் மகேந்திர சிங் தோனி தெரிவித்த கருத்து இதோ>>>இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பந்து வீச்சும், களத்தடுப்பும்தான் காரணம்.உதாரணமாக சாஹிர்கான்-ஒரே ஓவரில் 2 விக்கெட்டை கைப்பற்றி கொஞ்சம் நம்பிக்கை அளித்தார். ஆனால் 49-வது ஓவரில் களத்தடுப்பில் சொதப்பி நம்பிக்கையை தகர்த்து விட்டார். அவர் களத்தடுப்பில் கோட்டை விட்டதால் பவுண்டரி போனது. அதோடு எளிதான பிடியினையும் தவற விட்டார்.

இதுதவிர,நமது பந்து வீச்சாளர்கள் விக்கட்டுகளை கைப்பற்ற இயலாமல் திணறினார்கள். டில்ஷானின் ஆட்டத்தை கட்டுப்படுத்த தவறி விட்டனர். அவர் தொடர்ந்து 2-வது சதத்தை அடித்து அணியின் ஜெயிக்க முக்கிய பங்கு வகித்தார்.

3 comments:

  1. அஸ்பர்,
    எதை அண்ணா என்று,எதை கேட்டிருக்கிறீர்கள்?

    ReplyDelete
  2. //"வாழ்க்கை என்றால் அப்படித்தான் மேடுபள்ளம் இருக்கத்தானே செய்யும்" என்ன கொடுமையென்றால்,அவருக்கு இரண்டுமுறையும் பள்ளம்தான்.....//

    ஆணைக்கு ஒரு காலம் என்றால் பூனைக்கு ஒரு காலம் வராமல் போய்விடுமா?
    ஹீ.. ஹீ... ஹீ...

    ReplyDelete