Sunday, November 22, 2009

காற்றலையில் ஏழு ஆண்டுகள்

வானொலி ஒலிபரப்பு எனும் மிகப்பெரிய கடலுக்குள் நீச்சலடிக்க தொடங்கி 7 வருடங்கள் கடந்துவிட்டன,திருபிப்பார்கும்போது எவ்வளவோ நினைவுகள்..........
அவற்றைப்பற்றி சொல்லுவோமா? வேண்டாமா?

யோசிக்கிறேன்...............

பதிவு இடப்படும் திகதி 27:11:2009 பாகம்-01 நேரம் மாலை 05:50
சூரியனுக்கு அறிவிப்பாளர் தேர்வுக்காக வருமாறு அப்போதைய காரியதரிசி அருந்ததி அக்கா அழைத்து சொன்னார்.

அதற்குபிறகு நான் எத்தனையோ தொலைபேசிகள் பாவித்துவிட்டேன் இல
க்கங்களையும் மாற்றிவிட்டேன்.மாற்றங்கள் எத்தனை வந்தாலும் அந்த அழைப்புதான் என் வாழ்க்கை பாதையை மாற்றியமைத்தது! அழைப்பு வரும்போது நான் எங்கே இருந்தேன் தெரியுமா?

அது ஒரு வித்தியாசமான அனுபவம். பிறகு சொல்கிறேன்................



பதிவுத்திகதி 28:11:2009 பாகம் 02 நேரம் மாலை 06:46
கிரிகட் விளையாடுவதில் எப்பவுமே எனக்கு விருப்பம்,ஓரளவு நன்றாக துடுப்பெடுத்தாடக்கூடியவன் என்று நான் விளையாடுவதை பார்த்தவர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன்.
எனது நண்பர்களுடன் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருக்கும்போது திடீரென எனது தொலைபேசி அலற ஆரம்பித்தது நண்பனொருவன் ஓடோடி வந்து மச்சான் PHONE அடிக்குதுடா என்று தந்தான் அப்படியொரு இலக்கத்தில் இருந்து அதற்குமுன் எனக்கு உள்ளவரும் அழைப்பு வந்ததே இல்லை,அப்போது நான் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்ததால் வந்த அழைப்பை துண்டித்துவிட்டு விளையாட்டை தொடர்ந்தேன் மீண்டும் வந்தது மறுபடியும் துண்டித்தேன் மீண்டும் வந்தது எரிச்சலுடன் HELLO.... என்றேன் சூரியனிலிருந்து பேசுகிறோம் நீங்கள் நவநீதனா.. பதற்றத்துடன் ஆமாம் என்றேன், இன்று காலை 10 மணிக்கு உங்களுக்கு நேர்முகப்பரீட்சை வந்துடுங்கள் என்று மறுமுனையிலிருந்து கேட்டது, சரி கட்டாயமாக வருகிறேன் என்று சொன்னேன்,நல்லநேரம் விளையாடியபின் உடுத்த DRESS வைத்திருந்தேன்,வீட்டுக்கு போகாமல் சூரியனுக்கு போனேன்...மிச்சம் அடுத்த பதிப்பில்........




பதிவுத்திகதி 01:12:2009 பாகம் 03 நேரம் மாலை 03:15

கொழும்பில் இருந்தாலும் வெள்ளவத்தையை தவிர வேறு இடங்களுக்கு சென்றதில்லை,சூரியன் எங்கிருக்கிறது என்பதுகூட எனக்கு தெரியாது,உலக வர்த்தகமையம் இலங்கையிலேயே உயரமான கட்டிடம்,ஆனாலும் உலக வர்த்தக மையத்தைத்தேட நான்(எவ்வளவு முடியுமோ அவ்வளவு)அலையாத இடமே இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.

ஒருபாடாக உலகவர்த்தகமையத்தை தேடியாயிற்று,அந்த உயரமான கட்டிடத்திற்கு அருகில் சென்றதும் என் முதுகுத்தண்டு தெரியுமளவுக்கு தலை சுற்றியது,இலங்கையில் பிறந்த ஒவ்வொருவரும் ஒருமுறையாவது அந்த கட்டிடத்தை அருகில் சென்று பார்க்க வேண்டும்,கட்டிடம் முழுவதும் கண்ணாடியினால் செய்யப்பட்டதுபோல் பளபளவென ஜொலிக்கும்,சூரியன் நேர்முகத்தேர்வுக்காக செல்லும் ஒவ்வொருவரும் அந்த கட்டிடத்திற்கு அருகில் செல்லும்போது கனவுலகத்திற்கே சென்றுவிடுவார்கள்,நானும் அதே கனவுகளுடன் அன்று காலை 10 மணிக்கு சூரியன் வானொலியின் அலுவலக வரவேற்பறைக்கு சென்றேன், அப்போது என்னை சந்திக்கவந்த முதல் நபர் பரணீதரன்(இப்போது இலங்கையில் இல்லை இங்கிலாந்தில் இருக்கிறார் ) அவர் வந்து என்னிடம் கேட்ட முதல் கேள்வி....................


பதிவுத்திகதி 06:12:2009 பாகம் 04 நேரம் இரவு 11:15

காற்றலையில் 7 ஆண்டுகள் எனும் தலைப்பில் ஊடகம் என்ற சவால் நிறைந்த பாதையில் எனது பயணத்தை மீண்டும் திரும்பி பார்த்துக்கொண்டிருக்கிறேன் இந்த தொடர் கட்டுரையில் சிலரது பெயர்களை மறைமுகமாக குறிப்பிடலாமென நினைக்கிறேன்.

ஆனாலும் தொடரும் காலத்தில் அவர்களது பெயர்களை கட்டாயம் குறிப்பிடுவேன்.......



பதிவுத்திகதி 10:12:2009 பாகம் 05 நேரம் மதியம் 01:15

வேறு என்ன புதிதாக கேட்டிருக்க முடியும் சூரியனுக்கா வந்திருகிறீர்கள் என்பதே அவர் கேட்ட கேள்வி,நான் எதற்காக வந்தேனோ அதை சொன்னேன்,இருங்கள் வருகிறேன் என்று போனவர் வெளியில் வரவே இல்லை.

நிறைய நேரத்திற்கு பிறகு என்னை அழைப்பதற்காக வெளியில் வந்தவர் நான் எதிர் பார்க்காத ஒருவர் அவரை நான் X என்றே குறிப்பிடப்போகிறேன்....

என்னை அழைத்து சென்ற X உங்கள் குரல் வானொலிக்கு ஏற்றதாக இருக்கிறதா என்பதனை ஒருமுறை பதிவு செய்து பார்க்கவேண்டும் என கூறினார்.

உள்ளே அழைத்து சென்ற X இதுதான் Studio 8 என கூறினார்,அறிவிப்பாளர் தேர்வுக்காக வருபவர்களின் குரல் பதிவு இங்கேதான் மேற்கொள்ளபடும்,குளிர் அதிகமாக இருக்கும் [பழக்கம் இல்லாததால் தான் அப்படி]கைகால் எல்லாம் உதறும்(வாயும்கூட)பிறகு எப்படி வாசிக்க முடியும்,எல்லோருக்கும் அப்படிதான் இருக்கும்,ஆனால் X அதிகமான குளிர் உணராததுபோல் இருந்தார்,அவருக்கு பழகி விட்டது.

என்னிடம் சொன்னார் பயப்படாமல் வாசியுங்கள் என்று,அப்படி சொல்லும்போதுதான் இன்னும் உதறியது,ஆனால் எனக்குள் ஒரு வேகம் இருந்தது,அறிவிப்பாளர் தேர்வுக்கு செல்லும் எல்லோரிடமும் கட்டாயமாக இருக்க வேண்டியது,எனது அனுபவத்தில் சொல்கிறேன் அநேகமானவர்களிடம் அந்த வேகம் இருப்பதில்லை.
குரல் பதிவு செய்துகொண்டே Xன் முகத்தை பார்த்தேன்,அவரின் முகத்தில் எனது வாசிப்பின் மீது விருப்பம் ஏற்பட்டது தெரிந்தது,நடுக்கம் பயம் எதனையும் குரலில் வெளிப்படுத்தகூடாது என்பதில் கவனமாக இருந்தேன்...

குரல் பதிவும் முடிந்துவிட்டது .....
நான்,
தெரிவுசெய்யப்பட்டேனா? இல்லையா?
தெரிந்துகொள்ள காத்திருக்கவே இல்லை............


பதிவுத்திகதி 13:12:2009 பாகம் 06 நேரம் இரவு 11:17

காத்திருக்க வேண்டிய நிலை எனக்கு ஏற்படவில்லை,காரணம் என்னவென்றால் குரல் பரிசோதனை முடிந்து சில மணி நேரங்களிலேயே மறுபடியும் சூரியன் அலுவலகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது,சூரியன் அலுவலகத்திலிருந்து என்னுடன் பேசிய அருந்ததி அக்கா என்னை நாளைமுதல் பயிற்சி அறிவிப்பாளராக வருமாறு கூறினார்,மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
எனது கனவுலகம் நனவுலகமாக மாறியது,மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை,ஒரு விடயத்தினை நான் சொல்லியாகவேண்டும்,அறிவிப்பாளர் தேர்வுக்கு செல்லும்போது யாருக்கும் சொல்லக்கூடாது,தேர்வில் தெரிவுசெய்யப்பட்டால்சரி,தெரிவு செய்யப்படவில்லை என்றால் என்ன செய்வது,என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்வதட்காக வரிந்துகட்டிக்கொண்டு வரிசையில் நிற்பவர்களுக்கு என்ன பதில் சொல்வது,அதனால் தயவு செய்து யாரிடமும் சொல்லாமல் தேர்வுக்கு செல்லுங்கள்.
அறிவுரை போதும் என்று நினைகிறேன்,எனது புராணத்தை தொடர்கிறேன்..........
சூரியன் அலுவலகத்திற்க்கு சென்றேன்,அங்கு எனக்குமுன் 9 பேர் இருந்தார்கள்,பத்தாவதாக நான்,மொத்தம் பத்து பயிற்சி அறிவிப்பாளர்கள்
பத்துபேருக்கும் ஒருவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்,அவரை நான் Y என குறிப்பிடுகிறேன்.
எப்படி பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன என்பதுபற்றி அடுத்த பதிவில் குறிப்பிடுகிறேன்........



பதிவுத்திகதி 16:12:2009 பாகம் 07 நேரம் மாலை 05:123

நான் பொதுவாக எல்லோருடனும் உண்மையாக பழகக்கூடியவன்.ஆனாலும் புதிய இடம் என்பதால் அவ்வளவு இலகுவில் யாருடனும் பழக முடியவில்லை.

10 பயிற்சி அறிவிப்பாளர்களுக்கும் பொறுப்பாக ஒருவர் நியமிக்கப்பட்டார் என்று சொன்னேனே,அவர் எங்களுடன் கொஞ்சம் கடுமையாகவே நடந்துகொண்டார்.அவரது இயல்பு அதுவல்ல.இருந்தாலும்,எங்களுடன் பழகும்போது கடுமையான மனிதராகவே தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்.ஏன் என்று எங்களுக்கு புரியவில்லை!

எல்லோருக்கும் இடையில் ஒருவிதமான போட்டி இருந்தது.10 பேர் என்றால் சும்மாவா? யார் முந்திக்கொண்டு தனது ஆற்றலை வெளிப்படுத்துவது என்பதே எங்களுக்கிடையிலான மிகப்பெரிய போட்டி.ஓரிரு நாட்களிலேயே இசைத்தட்டு களஞ்சியத்திற்குச்சென்று, இசைத்தட்டுகள் எல்லாவற்றையும் புரட்ட ஆரம்பித்தேன்.நான் மட்டுமல்ல,எல்லோரும் அப்படித்தான்.கலையகத்தில் இருக்கும் மின்னியல் இசை விசைப்பலகையினை விரைவில் பழக எல்லோரும் முயற்சிப்போம்.மின்னியல் இசை விசைப்பலகையினை இயக்க தெரிந்தால்தான் நிகழ்ச்சி செய்ய அனுமதிப்பார்கள்,முந்திக்கொள்ளவேண்டுமே.......இந்த மிகப்பெரிய போட்டிக்கு நடுவில் எனக்கென்றால் பொறாமை துளி அளவும் இருந்ததில்லை........தொடரும்.......



பதிவுத்திகதி 20:12:2009 பாகம் 08 நேரம் மாலை 05:05

எனக்கு இசையமைக்க தெரியாது.பாடவும் முடியாது. ஆனாலும் ஒரு பாடலில் என்னென்னெல்லாம் இருந்தால் ரசிக்கக்கூடியதாக இருக்கும் என்பதை அறிந்தவனாக இருந்தேன். இந்த தகுதியினை வைத்துக்கொண்டு இசைக்கலவை செய்வதை கற்றுத்தேற வேண்டுமென முடிவெடுத்தேன். அதேவேளை ஒவ்வொரு நுணுக்கங்களையும் தெரிந்துகொள்ளவேண்டும் என்றும் முடிவெடுத்தேன். அப்படியென்றால் இசைக்கலவை பற்றி நூற்றுக்கு நூறுவீதம் தெரிந்தவர் ஒருவரிடம்தானே கற்க வேண்டும். அதற்க்காக எனது ஆசியராக நான் தெரிவு செய்தது தமிழ் தெரியாத ஒருவர். இசைக்கலவை தயாரிப்பு பற்றி அனைத்தும் தெரிந்த என்னை பிரமிக்க வைத்த ஒருவராகவே எப்போதும் அவர் காணப்பட்டார்.

இவ்வாறு,இந்த நுணுக்கங்களை தெரிந்துகொண்டால்,நிகழ்ச்சிகளுக்கான விளம்பரங்கள்,வானொலிக்கான விளம்பரங்கள், நாடகங்களுக்கான பின்னணி இசை போன்ற செயற்பாடுகளை அரங்கேற்றலாம். அதுவும் சரியாக தெரிந்துகொண்டால் வித்தியாசங்களை விதைக்கலாமல்லவா!

இதுதான் அப்போது பயன்படுத்தப்பட்ட இலத்திரனியல் பொறி....அப்போது கடமையாற்றிய அறிவிப்பாளர்களில் அநேகமானவர்களுக்கு இந்த பொறியினை இயக்க தெரியும். ஆனாலும் நூற்றுக்கு நூறுவீதம் தெரியாது.


இன்னுமொரு முக்கியமான விடயம் நான் குறிப்பிடும் காலம்வரை சூரியனைத்தவிர வேறு எந்த தமிழ் வானொலியும் இவ்வாறு இலத்திரனியல் பொறி பயன்படுத்தி தயாரிப்புகளை செய்திருக்கவில்லை


எனது குருநாதராக நான் தெரிவுசெய்தவர், சூரியனின் சகோதர வானொலியான SUN வானொலியில் அறிவிப்பாளராகவும், இசை மீள் கலவையாலராகாவும்,பின்னணி இசை தயாரிப்பாளராகவும் செயற்பட்டார். அதிகம் தனிமையை விரும்பும் ஒருவர். கர்வமும் அதிகமாகவே இருந்தது.சந்தேகங்களை கேட்டாலும் அவ்வளவு எளிதில் தீர்த்துவைக்கமாட்டார்.

ஏன் தெரியுமா?

7 comments:

  1. success fully completed 7 years?!...
    wooh!!.. Awesome.... we eagerly waiting to gather your experience brother...
    Although just remind the sweet memoriz of working with ypu and Sooriyan team!......

    regardz...................................


    :)....

    ReplyDelete
  2. விரைவில் எதிர்பாக்கிறோம்.......

    ReplyDelete
  3. //கொழும்பில் இருந்தாலும் வெள்ளவத்தையை தவிர வேறு இடங்களுக்கு சென்றதில்லை//

    நம்ப முடியவில்லையே???
    ம்ம்.... ஆரம்பமே சுவாரஷ்யமாக இருக்கு...... ஆவலோடு மிகுதியை அறிய காத்துகொண்டிருக்கிறோம்.... தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள் அண்ணா ஏழு ஆண்டுகள் நிறைவுக்கு..

    ReplyDelete
  4. Migudhi vidayangalai vegu viraivil padhivu seyyungal. Vaasikka aavaludan irukkirom.

    ReplyDelete
  5. A/L படிக்கும் போது கொப்பிய படிச்சத்தவிட சூரியன் கேட்டதுதான் கூட.

    கடந்த கால அனுபவங்கள அசைபோர்ரது ஒரு தனி ருசி,அதிலையும் நம்பளுக்கு பிடித்தவர்களுடையது என்டா... கசக்குமா??

    ஒரு சின்ன வேண்டுகோள்
    november 22nd ல இந்த தொடர் ஆரம்பிச்சு 13ம் திகதி
    வரைக்கும் எழுத பட்டிருக்கு ஆனா மேலோட்டமா blog அ பாக்கிறவங்களால நீங்க புதிதா சேர்த்துக்கொண்டத அறிய முடியாமல் இருக்கும்
    ஆகவே
    பகுதி-2,3,4 என்டு அந்த அந்த திகதியிலேயே பதிவ சேருங்கோ அண்ணா.

    users நினப்பாங்க நீங்க december 4க்கு பிறகு december 12லதான் பதிவிட்டிருக்கயல் என்டு நினைக்க
    வாய்ப்பிருக்கு

    பிழையா சொல்லிருந்தா மன்னியுங்கோ

    ReplyDelete
  6. எங்கடா பொறாம என்டு தேடினா இங்கேயா நீங்க எழுதியிருக்கயல்.

    அடுத்த பாகத்த விரைவில் எழுதவும்

    ReplyDelete
  7. ஏன் என்பதை தெரிந்துகொள்ள ஆவலுடன்

    ReplyDelete