Monday, May 31, 2010

"சிங்கம்" பார்த்தேன் ரசித்தேன்.........


"சிங்கம்" திரைப்படம் பார்த்தேன் ரசித்தேன்.......

சூர்யாவிடம் அடிவாங்கும் இருபதிற்கும் அதிகமானவர்கள் காற்றில் பறந்து விழுந்தாலும் ஏற்றுக்கொள்ள முடிகிறது.

சூர்யா அடிக்கும் அடி ஒவ்வொன்றும் இடியாகவே இருக்கிறது. கைகளும் கால்களும் எதிரிகளை பந்தாடும்போது சூர்யாவின் முகத்தில் தெரிகிறது ஆவேசம்....

சண்டைக்காட்சிகள் மட்டுமல்ல காதல்,அன்பு,உரிமை என சரியாக வாழையிலையில் பரிமாறப்பட்ட படையல் "சிங்கம்".....

கதையோடு இணைந்துசெல்லும் அனுஷ்கா அழகு ,விவேக் அட்டகாசம்....

நீண்ட அமைதிக்குப்பின் வெறியுடன் ஹரி தந்திருக்கும் திரைவிருந்துதான் "சிங்கம்".

"சுறா"வில் வில்லன் என்று ஒருவரை அறிமுகம் செய்துவைத்தார்களே!அவரின் முகத்தை ஒருநிமிடம் உற்றுப்பார்த்தால் """""கெகபுககெகபுக""""" என்று சிரிப்புதான் வரும்.

பிரகாஷ்ராஜ் சூர்யாவின் செயல்களுக்கு உயிர் தந்திருக்கிறார்.......

பாடல்கள் கேட்கக்கேட்க இனிக்கின்றன. பின்னணி இசையும் அசத்தல்........

"சிங்கம்" ரசிகர்களுக்கு கிடைத்த விலை மதிக்கமுடியாத தங்கம்.....

படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்கள் சில>>>>>>>>>



Tuesday, May 11, 2010

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்.............


விமர்சனம்.....

ஆர்ப்பாட்டத்தோடு வெளிவந்து மண்ணைகவ்விக்கிடக்கும் சில திரைப்படங்களுக்கு மத்தியில் இரும்புகோட்டை முரட்டு சிங்கம் நிமிர்ந்து நிற்பது நிச்சயம்.........

ஆரம்பம் முதல் முடிவுவரை திரையரங்கம் முழுவதும் ஒரே சிரிப்புச்சத்தம்தான்....

சீரியசான கட்டம் வந்துவிட்டது என்று நினைத்தால் உடனே வந்துவிடுகிறது சிரிப்பு.....

இயக்குனர் சிம்புதேவனின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை... இப்படியெல்லாம் யோசிக்க எப்படித்தான் முடியுதோ தெரியவில்லை.....

லோரன்ஸ் ஈடுபாடுடன் நடித்திருக்கிறார். நடனம் தெரிந்த ஒருவர்தான் பொருத்தமானவர் என்பதை உணர்ந்துதான் இவர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார் என்பது தெளிவு....

ஒரு வைரம் இருந்தால் தன்னுடன் இருக்கும் இரண்டு பிள்ளைகளை காப்பாற்றமுடியும் என்பதற்காக முரட்டுசிங்கமாக மாறியிருக்கிறார் லோரன்ஸ், பத்மப்ரியா நன்றாக நடித்திருக்கிறார். நாசர் கலக்கல், மனோரம்மா அப்பாவி, பாஸ்கர் புதிய மொழியொன்றை பேசி யோசிக்க வைத்திருக்கிறார். கூடவே சந்தியாவும் லக்ஷ்மிராயும் நடித்திருக்கிறார்கள். கலை இயக்குனர் படாதபாடு பட்டிருப்பார் என்பது திரையில் தெளிவாக தெரிகிறது. ஒளிப்பதிவாளர் ஆடுபுலி விளையாட்டு விளையாடியிருக்கிறார். பின்னணி இசை காட்சிகளுக்கு உயிர் கொடுக்கிறது. எல்லாமே நன்றாகத்தான் இருக்கின்றன! பாடல்கள் ஒன்றுமே மனதில் இடம்பிடிக்கவில்லை... G.V பிரகாஷ் என்ன நடந்தது உங்களுக்கு?????? சரி விடுவோம்....

படம் பார்க்ககூடியவாறு இருப்பது தற்போதைய மகிழ்ச்சி....

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்... பாடம் புகட்டியிருக்கிறது சீனியர் நடிகர்களுக்கு...........



N.நிழல்