Friday, December 18, 2009

இலங்கை வீரர்கள் திட்டமிட்டு செய்திருப்பார்களோ..........

இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணிதான் வெல்லும் என்ற எண்ணம் என் உள்மனதில் ஓடியது.எனது நண்பர் சூரியனின் நிதி முகாமையாளர் ராஜ் அண்ணாவிடம் இலங்கை அணிதான் வெல்லுமென்று சொன்னேன். அவர் இந்திய அணிதான் வெல்லுமென்று சொன்னார்.[நான் என்ன சொன்னாலும் எனது கருத்திற்கு எதிரான கருத்தினை அவர் சொல்லவார் இப்படி ஒருவிதமான நடைமுறை எங்களுக்குள் இருந்தது] முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிதான் வெல்லுமென்று நான் சொன்னேன் இல்லை இல்லை இலங்கை அணிதான் வெல்லுமென்று அவர் சொன்னார். முடிவில் ஜெயித்தது நான்தான்.

இரண்டாவது ஒருநாள் போட்டி ஆரம்பிப்பதற்காக நாணயம் சுழற்றப்பட்டது. நாணயம் தோனியின் குரலுக்கு செவி சாய்த்தது. எனது தொலைபேசியில் திடிரென ராஜ் அண்ணாவின் பெயர் தென்பட்டது,அவரின் அழைப்பை ஏற்றுக்கொண்டேன், அவரது சிரிப்பொலி கேட்டது, நானும் சிரித்தேன்.

இந்திய அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்து சில நிமிடங்களில் அதிரடி ஆட்டக்காரர் ஷெவாக் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததும்,எனது தொலைபேசியை எடுத்தேன் அழைத்தேன் சிரித்தேன், அவரும் சிரித்தார். இன்னும் சில நிமிடங்களில் கம்பீரும் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.நான் மீண்டும் அதே நடைமுறையினை செய்தேன். சச்சின் தோனி ரெய்னா இருப்பதாக சொன்னார். அவர் சொன்னதுபோல தோனி 107 ஓட்டங்கள்,சச்சின் 43 ஓட்டங்கள்,ரெய்னா 68 ஓட்டங்கள். இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 301 ஓட்டங்களை எடுத்தது. எனக்கு அழைப்பு வந்தது. ஆஹா ஓஹோ என சிரித்தார். சமாதானத்திற்க்கு வருவோமா எனக்கேட்டார். [இந்த மைதானத்தில் இதற்க்குமுன் ஒரேயொரு சர்வதேச ஒருநாள் போட்டிதான் நடைபெற்றது.அதிலும் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 300க்கும் அதிகமான ஓட்டங்களை பெற்று ஜெயித்தது] ஆனால் நான் எனது முடிவில் தீர்மானமாகவே இருந்தேன்.

பந்து வீச்சில் இலங்கை வீரர் ரந்திவ் 3 விக்கட்டுகளையும் வெலகெதர,மென்டிஸ்,மெத்திவுஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டுகளையும் வீழ்த்தினார்கள். இலங்கை அணி துடுப்பாட களம் புகுந்து சிறப்பாக ஓட்டங்களை குவித்தது. அழைத்தேன் சிரித்தேன்.அவர் மௌனம் சாதித்தார். டில்ஷான் 123 ஓட்டங்கள் எடுத்தபோது திடிரென ஆட்டமிழந்தார். மீண்டும் அழைப்பும் வந்தது சிரிப்பொலியும் கேட்டது. சங்கக்கார 21 ஓட்டங்கள்,ஜெயவர்த்தன 39 ஓட்டங்கள்,கண்டம்பி 27 ஓட்டங்கள்,மெத்திவுஸ் 37 ஓட்டங்கள் எடுத்தனர்.


இறுதியில் 302 ஓட்டங்கள் எடுத்து இலங்கை அணி வென்றது. திட்டமிட்டு செய்திருப்பார்களோ? இந்திய அணியும் 7 விக்கட்டுகளை இழந்து 301 ஓட்டங்களை எடுத்தது. அதேபோல் இலங்கை அணியும் 7 விக்கட்டுகளை 302 ஓட்டங்களை எடுத்து ஜெயித்தது. பந்துவீச்சில் சாஹிர்கான் 3 விக்கட்டுகளையும், ஆஷிஷ் நெஹ்ரா, ஹர்பஜங் சிங் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டுகளையும் வீழ்த்தினார்கள். போட்டி முடிந்ததும் அழைத்தேன்,சிரித்தேன்! பதிலுக்கு அவர் சொல்லியதை சொல்கிறேன் வாசியுங்கள்>>> "வாழ்க்கை என்றால் அப்படித்தான் மேடுபள்ளம் இருக்கத்தானே செய்யும்" என்ன கொடுமையென்றால்,அவருக்கு இரண்டுமுறையும் பள்ளம்தான்.........எது எப்படி இருந்தாலும், தோல்விக்கான காரணம் என்னவென இந்திய அணயின் தலைவர் மகேந்திர சிங் தோனி தெரிவித்த கருத்து இதோ>>>இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பந்து வீச்சும், களத்தடுப்பும்தான் காரணம்.உதாரணமாக சாஹிர்கான்-ஒரே ஓவரில் 2 விக்கெட்டை கைப்பற்றி கொஞ்சம் நம்பிக்கை அளித்தார். ஆனால் 49-வது ஓவரில் களத்தடுப்பில் சொதப்பி நம்பிக்கையை தகர்த்து விட்டார். அவர் களத்தடுப்பில் கோட்டை விட்டதால் பவுண்டரி போனது. அதோடு எளிதான பிடியினையும் தவற விட்டார்.

இதுதவிர,நமது பந்து வீச்சாளர்கள் விக்கட்டுகளை கைப்பற்ற இயலாமல் திணறினார்கள். டில்ஷானின் ஆட்டத்தை கட்டுப்படுத்த தவறி விட்டனர். அவர் தொடர்ந்து 2-வது சதத்தை அடித்து அணியின் ஜெயிக்க முக்கிய பங்கு வகித்தார்.

சூரியனுக்கு இரண்டு விருதுகள்..........


இலங்கை விளம்பரத்துறையின் தந்தை ரெஜி அவர்களின் நினைவாக ஒவ்வொரு வருடமும் வித்தியாசமான சிந்தனைக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த வருடத்திற்கான விருது வழங்கும் நிகழ்வில் வித்தியாசமான சிந்தனைகளுடன் எல்லோரையும் காலை வேளையில் உற்சாகப்படுத்தி,சுவாரசியமான தலைப்புகளையும் தகவல்களையும் வழங்கி,திங்கள் முதல் வெள்ளிவரை வித்தியாசமான சிந்தனைகளின் உயிர்ப்பிடமாக திகழ்ந்தமைக்காக,தமிழில் ஒலிபரப்பாகும் காலைநேர நிகழ்ச்சிகளில் சிறந்த நிகழ்ச்சிக்கான விருது சூரியராகங்கள் நிகழ்ச்சிக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

அதேவேளை ஒரு நிலையத்தினை அடையாளப்படுத்துவதட்கான நிலையக்குறியிசைக்கான விருது,"எத்தனை நாளாய் கேட்டுவிட்டேன்" நிலையக்குறியிசை 36 வானொலிகளுடன் போட்டியிட்டு சிறந்த நிலையக்குறியிசையாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கௌரவம் கிடைக்கப்பெற்றதிளிருந்து இன்றுவரை எமக்கு வாழ்த்துகளை தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்.............

Thursday, December 17, 2009

முடித்தால் இந்த புகைப்படத்தில் இருப்பது யாரென்று கண்டுபிடித்து பதிவு செய்யுங்கள்............

உதவும் கரங்கள்...........


கள்ளங்கபடமற்ற அந்த பிஞ்சுக்குழந்தைகளுக்கு உதவ உங்களுக்கும் ஒரு வாய்ப்பு. உங்கள் உதவிப்பொருட்களை ஒப்படைக்க வேண்டிய இடங்கள் பற்றிய விபரங்களை அறிந்துகொள்ள அழையுங்கள் 0114799775
 Colombo – SLECC

 Modara – Naavalar Mani Mandabam
Mr. Selvarathnam – 0777 228989

 Kathiresan Street – Vishvakarma Sangam
Mr. Sithambaram - 0112 423169

 Kotahena – Arul Study Circle
Mr. Chandrasekar – 0112 331495

 Hatton – No. 2, Park Road
Mr. Murali – 0777 518817

 Talawakelle – Sooriyan Fan Club
Mr. Murali – 072 4770915

 Dickoya – Sooriyan Fan Club
110, Batalgala Junction
Mr. Chandrakumar – 077 9090214

 Nuwara Eliya – Hindu Cultural Centre
Mr. Balakrishnan – 077 3179138

 Kandy – 103, Colombo Road
Mr. Vishva – 0777 357278

 Chilaw – 1st mile Post, Munneswaram,
Ms. Uma Shanthi – 077 2379635

Tuesday, December 15, 2009

ஷெவாக் மனிதனே இல்லை,டில்ஷான் ஒரு மிருகம்.....

இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி விறுவிறுப்பின் எல்லை.....

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 7 விக்கட்டுகளை இழந்து 414 ஓட்டங்களை பெற்றதும் எல்லோரும் நினைத்தார்கள் இலங்கைக்கு படுதோல்விதான் மிஞ்சும் என்று,

ஷெவாக் ஒரு மனிதனே இல்லை,

என்னவொரு வேகம்,துணிச்சல்,அப்படியொரு துடுப்பாட்டத்தை இதற்க்குமுன் எந்தவொரு இந்திய வீரரிடமும் நான் கண்டதில்லை.102 பந்துகளுக்கு 146 ஓட்டங்கள்.....

அடித்தால் நெத்தியடி தட்டினால் நிலையான தீர்மானம்,எந்தவொரு நிலை தடுமாற்றமும் இல்லவே இல்லை.

பதிலுக்கு டில்ஷான்,
எப்படி பந்தினை வீசினாலும் அடிப்பேன் என்ற முடிவோடுதான் களமிறங்கியிருப்பாரோ என எண்ணத்தோன்றுகிறது,இந்த போட்டியில் அதிகமான ஓட்டங்களை பெற்ற வீரர் டில்ஷாந்தான், 124 பந்துகளுக்கு 160 ஓட்டங்கள்,குமார் சங்கக்காரவும் தனது பங்கினை சிறப்பாகவே செய்திருந்தார்,ஆனாலும் இலங்கை அணிக்கு மிஞ்சியது என்னவோ தோல்விதான் 3 ஓட்டங்களால் தோல்வி..... இலங்கை வீரர்கள் இறுதி பந்துவரை முயற்சித்தார்கள் ஆனால் பலனளிக்கவில்லை.......

Monday, December 14, 2009

தமிழ் வலைப்பதிவர்சந்திப்பு


வலைப்பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு 13/12/2009 அன்று வெள்ளவத்தையில் நடைபெற்றது.

முதலாவது சந்திப்பு நடைபெற்றபோது நான் வலைப்பூ ஆரம்பித்திருக்கவில்லை,இந்த சந்திப்பின்போது முக்கியமான பலவிடயங்களை கலந்துரையாடக்கூடியதாக இருந்தது.

கலந்துரையாடல் முடிந்ததும் சில விளையாட்டுப்போட்டிகளும் நடத்தப்பட்டன.......

Saturday, December 12, 2009

ஊடக மயக்கம் நானும் சொல்கிறேன் ...

இலங்கையில் தமிழ் திரைப்படங்கள் ரசிகர்களை திருப்திப்படுத்துமளவுக்கு உருவாவதில்லை,அப்படி இருக்கும்போது இலங்கையில் வானொலி அறிவிப்பாளர்கள்தான் நட்சத்திரங்கள்,இவர்களின் மனம் நோகும்படியான ஒரு கட்டுரையினை இருக்கிறம் வெளியிடுமென கனவிலும் நினைக்காதவன் நான்,தேர்ச்சி பெற்றவர்கள் இருக்கும் "இருக்கிறம்"என்று மனதிற்குள் நெகிழ்ந்ததுண்டு.........

ஒலிபரப்பாளர்கள் பற்றிய தவறான கருத்துகளை பரப்ப நினைப்பது மிகப்பெரிய பிழை,இது ஆரோக்கியமான செயல் அல்ல.

ஊடகம் போட்டி நிறைந்த இடம் என்பதை எல்லோரும் அறிவார்கள்,இங்கு ஜெயிக்க வேண்டுமென்றால் உழைக்க வேண்டும்,இது தவிர தேடல்,நேரம்பார்க்காமல் வேலை செய்யும் பழக்கம்,நேர்மையாக நடந்துகொள்ளும் பண்பு,இவை இருந்தால்தான் சாதிக்கலாம், தவறினால் ஊடகங்களில் மட்டுமல்ல வேறு எந்த தொழிலாக இருந்தாலும் குறைந்த ஊதியம்தான் கிடைக்கும்.

வாய்ப்புகள் எல்லோருக்கும் கிடைக்காது என்பது உண்மைதான்,கிடைக்கும் வாய்ப்பினை சரியாக பயன்படுத்த தெரியாதவர்களின் புலம்பல் என்று எடுத்து ஆறுதல் சொல்லி அமர்வதே எமக்கு அழகென்று நினைக்கிறேன்..........நான் சொல்வது சரிதானே.....


கருணையூரான் said...

நீங்க சொல்வது சரிதான்...ஆனால் உங்கள் எதிர்க்கருத்தை அதே சஞ்சிகையில் வெளியிடலாமே.....அது ஒருவனின் கருத்து அதை போட்ட "இருக்கிறம்" சஞ்சிகையில் தப்பு இருக்கா எண்டு எனக்கு தெரியல...ஆனால் அவர்கள் விற்பனையைக் கூட்டவும் செய்திருக்கலாம்......

கருணையூரான்,

அவரது தனிப்பட்ட கருத்தினை வெளியிட பத்திரிகை ஒன்றினை பயன்படுத்தக்கூடாது என்பதே எனது கருத்து,வலைப்பதிவில் சுதந்திரமாக எதை வேண்டுமானாலும் பதிவிடலாம்,
ஆனால் பத்திரிகை ஊடகம் அப்படியில்லை,அவரது உள்ளக்குமுறலை வெளியிடும் "இருக்கிறம்"தவிர்க்கப்பட வேண்டியவற்றை தொகுத்து வெளியிட்டிருக்கலாம் என்பதே எனது கருத்து............

நீங்கள் சொல்வதுபோல எனது எதிர் கருத்தினை அதே சஞ்சிகையில்வெளியிடலாம்,
ஆனால் அவர்களோடு தொடர்புகொண்டு இதனை பிரசுரிக்க எனக்கு நேரம் இல்லை.
எனது வலைப்பூவில் நான் எழுதிய கருத்தினை அவர்கள் பிரசுரிப்பதாக இருந்தால் தாராளமாக பிரசுரிக்கலாம்......தடையில்லை.......

Friday, December 4, 2009

நேற்று ஷெவாக்கின் அதிரடி இன்று முரளியின் பதிலடி........

நேற்று ஷெவாக்கின் அதிரடி இன்று முரளியின் பதிலடி........
டெஸ்ட் போட்டிகள் இல்லாமல் போய்விடும்,இனி டெஸ்ட் போட்டிகள் நடத்த தேவை இல்லை,டெஸ்ட் போட்டிகளை பார்க்க யாரும் மைதானங்களுக்கு செல்வதில்லை,டெஸ்ட் போட்டிகளின் ஓவர்களை குறைக்க வேண்டும்,

இவையெல்லாம் கடந்த காலங்களில் எல்லோரும் சொன்ன வார்த்தைகள்,

இவற்றை கேட்டு ஆத்திரமுற்று ஷெவாக் ஆடிய உருத்ரதாண்டவம் நன்றாகத்தான் இருந்தது,

ஷெவாக்கின் அதிரடியால் இலங்கையணியுடனான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் மன்னிக்கவும் T20 போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் களைகட்டியது.
Batting and fielding averages
Mat Inns NO Runs HS Ave BF SR 100 50
71 122 4 5955 319 50.46 7513 79.26 16 19
மூன்றாவது நாள் முரளியின் பதிலடி ஷெவாக்கை பதம் பார்த்தது,
300 ஓட்டங்களை பெற முடியாமல் கவலையுடன் வெளியேறினார் ஷெவாக்,மகிழ்ச்சியில் மகிழ்ந்தார் முரளி.........

Wednesday, December 2, 2009

வட்ட மேசை...

இது உங்கள் கருத்துகளுக்கான இடம்


உங்கள் கருத்துகளையும் சிந்தனைகளையும் பதிவு செய்யுங்கள்............

Tuesday, December 1, 2009

உலகத்தை நான் வெறுக்கிறேன்,


உலகத்தை நான் வெறுக்கிறேன்,

ஏன்தான் இப்படி இருக்கிறார்களோ தெரியவில்லை,
போதை உலகம் எனக்கு பிடிக்கவில்லை,
இவர்களை பார்த்தாலே கோபம் என் நிதானத்தை மீறுகிறது,
குடும்பத்தை மறந்து உறவுகளை மறந்து தன்னையும் மறந்து போதையில் மிதக்கும் இவர்களை பார்க்கவே பிடிக்கவில்லை,இவர்கள் திருந்துவார்களா?
எனது பதில்…….மாட்டார்கள் மாட்டார்கள்……
எதிர்காலம் இப்படி மாறிவிடுமோ என்று பயமாக இருக்கிறது.

Tuesday, November 24, 2009

திருடாதே பாப்பா திருடாதே......... விரைவில்........

காலத்தை வெல்லும் நிலையக்குறி இசைகள்



சினிமாப்பாடல்களுக்கு நிகரான குறு இசைகளை வழங்குவதில் சூரியனுக்கு நிகர் சூரியன்தான்.
சூரியன் வானொலி தனது ஒலிபரப்பினை ஆரம்பித்து பதினொரு வருடங்களை மிக சிறப்பாக கொண்டாடியது.




கொண்டாட்டத்தின் அடையாளமாக சூரிய சொந்தங்களுக்கு அறிமுகம் செய்த நிலையக்குறி இசைகளை எனது வலைப்பதிவான wwww.nava-neethan.blogspot.com ஊடாக புலம்பெயர்ந்து வாழும் சூரிய சொந்தங்களும் கேட்டு ரசிக்ககூடியவகையில் விரைவில் உங்களுக்கு வழங்கப்போகிறேன்.

தொடரும் நாட்களில் சூரியனின் எல்லா நிலையக்குறி இசைகளையும் வழங்கலாம் என நினைக்கிறேன்.
அனைத்தும் நம்நாட்டு படைப்புகளே............

Monday, November 23, 2009

பிச்சுமணி......



வாரான்டா பிச்சுமணி வாரான்டா பிச்சுமணி......

வேட்டிய மடிச்சுக்கட்டி மீசையத்தான் முறுக்கிக்கிட்டு வாரான்டா பிச்சுமணி வாரான்டா பிச்சுமணி............



உங்கள் செவிகளுக்கு விருந்தளிக்க .....................
www.nava-neethan.blogspot.com ஊடாக
விரைவில்............................

Sunday, November 22, 2009

காற்றலையில் ஏழு ஆண்டுகள்

வானொலி ஒலிபரப்பு எனும் மிகப்பெரிய கடலுக்குள் நீச்சலடிக்க தொடங்கி 7 வருடங்கள் கடந்துவிட்டன,திருபிப்பார்கும்போது எவ்வளவோ நினைவுகள்..........
அவற்றைப்பற்றி சொல்லுவோமா? வேண்டாமா?

யோசிக்கிறேன்...............

பதிவு இடப்படும் திகதி 27:11:2009 பாகம்-01 நேரம் மாலை 05:50
சூரியனுக்கு அறிவிப்பாளர் தேர்வுக்காக வருமாறு அப்போதைய காரியதரிசி அருந்ததி அக்கா அழைத்து சொன்னார்.

அதற்குபிறகு நான் எத்தனையோ தொலைபேசிகள் பாவித்துவிட்டேன் இல
க்கங்களையும் மாற்றிவிட்டேன்.மாற்றங்கள் எத்தனை வந்தாலும் அந்த அழைப்புதான் என் வாழ்க்கை பாதையை மாற்றியமைத்தது! அழைப்பு வரும்போது நான் எங்கே இருந்தேன் தெரியுமா?

அது ஒரு வித்தியாசமான அனுபவம். பிறகு சொல்கிறேன்................



பதிவுத்திகதி 28:11:2009 பாகம் 02 நேரம் மாலை 06:46
கிரிகட் விளையாடுவதில் எப்பவுமே எனக்கு விருப்பம்,ஓரளவு நன்றாக துடுப்பெடுத்தாடக்கூடியவன் என்று நான் விளையாடுவதை பார்த்தவர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன்.
எனது நண்பர்களுடன் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருக்கும்போது திடீரென எனது தொலைபேசி அலற ஆரம்பித்தது நண்பனொருவன் ஓடோடி வந்து மச்சான் PHONE அடிக்குதுடா என்று தந்தான் அப்படியொரு இலக்கத்தில் இருந்து அதற்குமுன் எனக்கு உள்ளவரும் அழைப்பு வந்ததே இல்லை,அப்போது நான் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்ததால் வந்த அழைப்பை துண்டித்துவிட்டு விளையாட்டை தொடர்ந்தேன் மீண்டும் வந்தது மறுபடியும் துண்டித்தேன் மீண்டும் வந்தது எரிச்சலுடன் HELLO.... என்றேன் சூரியனிலிருந்து பேசுகிறோம் நீங்கள் நவநீதனா.. பதற்றத்துடன் ஆமாம் என்றேன், இன்று காலை 10 மணிக்கு உங்களுக்கு நேர்முகப்பரீட்சை வந்துடுங்கள் என்று மறுமுனையிலிருந்து கேட்டது, சரி கட்டாயமாக வருகிறேன் என்று சொன்னேன்,நல்லநேரம் விளையாடியபின் உடுத்த DRESS வைத்திருந்தேன்,வீட்டுக்கு போகாமல் சூரியனுக்கு போனேன்...மிச்சம் அடுத்த பதிப்பில்........




பதிவுத்திகதி 01:12:2009 பாகம் 03 நேரம் மாலை 03:15

கொழும்பில் இருந்தாலும் வெள்ளவத்தையை தவிர வேறு இடங்களுக்கு சென்றதில்லை,சூரியன் எங்கிருக்கிறது என்பதுகூட எனக்கு தெரியாது,உலக வர்த்தகமையம் இலங்கையிலேயே உயரமான கட்டிடம்,ஆனாலும் உலக வர்த்தக மையத்தைத்தேட நான்(எவ்வளவு முடியுமோ அவ்வளவு)அலையாத இடமே இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.

ஒருபாடாக உலகவர்த்தகமையத்தை தேடியாயிற்று,அந்த உயரமான கட்டிடத்திற்கு அருகில் சென்றதும் என் முதுகுத்தண்டு தெரியுமளவுக்கு தலை சுற்றியது,இலங்கையில் பிறந்த ஒவ்வொருவரும் ஒருமுறையாவது அந்த கட்டிடத்தை அருகில் சென்று பார்க்க வேண்டும்,கட்டிடம் முழுவதும் கண்ணாடியினால் செய்யப்பட்டதுபோல் பளபளவென ஜொலிக்கும்,சூரியன் நேர்முகத்தேர்வுக்காக செல்லும் ஒவ்வொருவரும் அந்த கட்டிடத்திற்கு அருகில் செல்லும்போது கனவுலகத்திற்கே சென்றுவிடுவார்கள்,நானும் அதே கனவுகளுடன் அன்று காலை 10 மணிக்கு சூரியன் வானொலியின் அலுவலக வரவேற்பறைக்கு சென்றேன், அப்போது என்னை சந்திக்கவந்த முதல் நபர் பரணீதரன்(இப்போது இலங்கையில் இல்லை இங்கிலாந்தில் இருக்கிறார் ) அவர் வந்து என்னிடம் கேட்ட முதல் கேள்வி....................


பதிவுத்திகதி 06:12:2009 பாகம் 04 நேரம் இரவு 11:15

காற்றலையில் 7 ஆண்டுகள் எனும் தலைப்பில் ஊடகம் என்ற சவால் நிறைந்த பாதையில் எனது பயணத்தை மீண்டும் திரும்பி பார்த்துக்கொண்டிருக்கிறேன் இந்த தொடர் கட்டுரையில் சிலரது பெயர்களை மறைமுகமாக குறிப்பிடலாமென நினைக்கிறேன்.

ஆனாலும் தொடரும் காலத்தில் அவர்களது பெயர்களை கட்டாயம் குறிப்பிடுவேன்.......



பதிவுத்திகதி 10:12:2009 பாகம் 05 நேரம் மதியம் 01:15

வேறு என்ன புதிதாக கேட்டிருக்க முடியும் சூரியனுக்கா வந்திருகிறீர்கள் என்பதே அவர் கேட்ட கேள்வி,நான் எதற்காக வந்தேனோ அதை சொன்னேன்,இருங்கள் வருகிறேன் என்று போனவர் வெளியில் வரவே இல்லை.

நிறைய நேரத்திற்கு பிறகு என்னை அழைப்பதற்காக வெளியில் வந்தவர் நான் எதிர் பார்க்காத ஒருவர் அவரை நான் X என்றே குறிப்பிடப்போகிறேன்....

என்னை அழைத்து சென்ற X உங்கள் குரல் வானொலிக்கு ஏற்றதாக இருக்கிறதா என்பதனை ஒருமுறை பதிவு செய்து பார்க்கவேண்டும் என கூறினார்.

உள்ளே அழைத்து சென்ற X இதுதான் Studio 8 என கூறினார்,அறிவிப்பாளர் தேர்வுக்காக வருபவர்களின் குரல் பதிவு இங்கேதான் மேற்கொள்ளபடும்,குளிர் அதிகமாக இருக்கும் [பழக்கம் இல்லாததால் தான் அப்படி]கைகால் எல்லாம் உதறும்(வாயும்கூட)பிறகு எப்படி வாசிக்க முடியும்,எல்லோருக்கும் அப்படிதான் இருக்கும்,ஆனால் X அதிகமான குளிர் உணராததுபோல் இருந்தார்,அவருக்கு பழகி விட்டது.

என்னிடம் சொன்னார் பயப்படாமல் வாசியுங்கள் என்று,அப்படி சொல்லும்போதுதான் இன்னும் உதறியது,ஆனால் எனக்குள் ஒரு வேகம் இருந்தது,அறிவிப்பாளர் தேர்வுக்கு செல்லும் எல்லோரிடமும் கட்டாயமாக இருக்க வேண்டியது,எனது அனுபவத்தில் சொல்கிறேன் அநேகமானவர்களிடம் அந்த வேகம் இருப்பதில்லை.
குரல் பதிவு செய்துகொண்டே Xன் முகத்தை பார்த்தேன்,அவரின் முகத்தில் எனது வாசிப்பின் மீது விருப்பம் ஏற்பட்டது தெரிந்தது,நடுக்கம் பயம் எதனையும் குரலில் வெளிப்படுத்தகூடாது என்பதில் கவனமாக இருந்தேன்...

குரல் பதிவும் முடிந்துவிட்டது .....
நான்,
தெரிவுசெய்யப்பட்டேனா? இல்லையா?
தெரிந்துகொள்ள காத்திருக்கவே இல்லை............


பதிவுத்திகதி 13:12:2009 பாகம் 06 நேரம் இரவு 11:17

காத்திருக்க வேண்டிய நிலை எனக்கு ஏற்படவில்லை,காரணம் என்னவென்றால் குரல் பரிசோதனை முடிந்து சில மணி நேரங்களிலேயே மறுபடியும் சூரியன் அலுவலகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது,சூரியன் அலுவலகத்திலிருந்து என்னுடன் பேசிய அருந்ததி அக்கா என்னை நாளைமுதல் பயிற்சி அறிவிப்பாளராக வருமாறு கூறினார்,மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
எனது கனவுலகம் நனவுலகமாக மாறியது,மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை,ஒரு விடயத்தினை நான் சொல்லியாகவேண்டும்,அறிவிப்பாளர் தேர்வுக்கு செல்லும்போது யாருக்கும் சொல்லக்கூடாது,தேர்வில் தெரிவுசெய்யப்பட்டால்சரி,தெரிவு செய்யப்படவில்லை என்றால் என்ன செய்வது,என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்வதட்காக வரிந்துகட்டிக்கொண்டு வரிசையில் நிற்பவர்களுக்கு என்ன பதில் சொல்வது,அதனால் தயவு செய்து யாரிடமும் சொல்லாமல் தேர்வுக்கு செல்லுங்கள்.
அறிவுரை போதும் என்று நினைகிறேன்,எனது புராணத்தை தொடர்கிறேன்..........
சூரியன் அலுவலகத்திற்க்கு சென்றேன்,அங்கு எனக்குமுன் 9 பேர் இருந்தார்கள்,பத்தாவதாக நான்,மொத்தம் பத்து பயிற்சி அறிவிப்பாளர்கள்
பத்துபேருக்கும் ஒருவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்,அவரை நான் Y என குறிப்பிடுகிறேன்.
எப்படி பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன என்பதுபற்றி அடுத்த பதிவில் குறிப்பிடுகிறேன்........



பதிவுத்திகதி 16:12:2009 பாகம் 07 நேரம் மாலை 05:123

நான் பொதுவாக எல்லோருடனும் உண்மையாக பழகக்கூடியவன்.ஆனாலும் புதிய இடம் என்பதால் அவ்வளவு இலகுவில் யாருடனும் பழக முடியவில்லை.

10 பயிற்சி அறிவிப்பாளர்களுக்கும் பொறுப்பாக ஒருவர் நியமிக்கப்பட்டார் என்று சொன்னேனே,அவர் எங்களுடன் கொஞ்சம் கடுமையாகவே நடந்துகொண்டார்.அவரது இயல்பு அதுவல்ல.இருந்தாலும்,எங்களுடன் பழகும்போது கடுமையான மனிதராகவே தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்.ஏன் என்று எங்களுக்கு புரியவில்லை!

எல்லோருக்கும் இடையில் ஒருவிதமான போட்டி இருந்தது.10 பேர் என்றால் சும்மாவா? யார் முந்திக்கொண்டு தனது ஆற்றலை வெளிப்படுத்துவது என்பதே எங்களுக்கிடையிலான மிகப்பெரிய போட்டி.ஓரிரு நாட்களிலேயே இசைத்தட்டு களஞ்சியத்திற்குச்சென்று, இசைத்தட்டுகள் எல்லாவற்றையும் புரட்ட ஆரம்பித்தேன்.நான் மட்டுமல்ல,எல்லோரும் அப்படித்தான்.கலையகத்தில் இருக்கும் மின்னியல் இசை விசைப்பலகையினை விரைவில் பழக எல்லோரும் முயற்சிப்போம்.மின்னியல் இசை விசைப்பலகையினை இயக்க தெரிந்தால்தான் நிகழ்ச்சி செய்ய அனுமதிப்பார்கள்,முந்திக்கொள்ளவேண்டுமே.......இந்த மிகப்பெரிய போட்டிக்கு நடுவில் எனக்கென்றால் பொறாமை துளி அளவும் இருந்ததில்லை........தொடரும்.......



பதிவுத்திகதி 20:12:2009 பாகம் 08 நேரம் மாலை 05:05

எனக்கு இசையமைக்க தெரியாது.பாடவும் முடியாது. ஆனாலும் ஒரு பாடலில் என்னென்னெல்லாம் இருந்தால் ரசிக்கக்கூடியதாக இருக்கும் என்பதை அறிந்தவனாக இருந்தேன். இந்த தகுதியினை வைத்துக்கொண்டு இசைக்கலவை செய்வதை கற்றுத்தேற வேண்டுமென முடிவெடுத்தேன். அதேவேளை ஒவ்வொரு நுணுக்கங்களையும் தெரிந்துகொள்ளவேண்டும் என்றும் முடிவெடுத்தேன். அப்படியென்றால் இசைக்கலவை பற்றி நூற்றுக்கு நூறுவீதம் தெரிந்தவர் ஒருவரிடம்தானே கற்க வேண்டும். அதற்க்காக எனது ஆசியராக நான் தெரிவு செய்தது தமிழ் தெரியாத ஒருவர். இசைக்கலவை தயாரிப்பு பற்றி அனைத்தும் தெரிந்த என்னை பிரமிக்க வைத்த ஒருவராகவே எப்போதும் அவர் காணப்பட்டார்.

இவ்வாறு,இந்த நுணுக்கங்களை தெரிந்துகொண்டால்,நிகழ்ச்சிகளுக்கான விளம்பரங்கள்,வானொலிக்கான விளம்பரங்கள், நாடகங்களுக்கான பின்னணி இசை போன்ற செயற்பாடுகளை அரங்கேற்றலாம். அதுவும் சரியாக தெரிந்துகொண்டால் வித்தியாசங்களை விதைக்கலாமல்லவா!

இதுதான் அப்போது பயன்படுத்தப்பட்ட இலத்திரனியல் பொறி....அப்போது கடமையாற்றிய அறிவிப்பாளர்களில் அநேகமானவர்களுக்கு இந்த பொறியினை இயக்க தெரியும். ஆனாலும் நூற்றுக்கு நூறுவீதம் தெரியாது.


இன்னுமொரு முக்கியமான விடயம் நான் குறிப்பிடும் காலம்வரை சூரியனைத்தவிர வேறு எந்த தமிழ் வானொலியும் இவ்வாறு இலத்திரனியல் பொறி பயன்படுத்தி தயாரிப்புகளை செய்திருக்கவில்லை


எனது குருநாதராக நான் தெரிவுசெய்தவர், சூரியனின் சகோதர வானொலியான SUN வானொலியில் அறிவிப்பாளராகவும், இசை மீள் கலவையாலராகாவும்,பின்னணி இசை தயாரிப்பாளராகவும் செயற்பட்டார். அதிகம் தனிமையை விரும்பும் ஒருவர். கர்வமும் அதிகமாகவே இருந்தது.சந்தேகங்களை கேட்டாலும் அவ்வளவு எளிதில் தீர்த்துவைக்கமாட்டார்.

ஏன் தெரியுமா?